ரேடியோ

ரேடியோவைக் கேட்பது


நீங்கள் பல்வேறு தேடல் முறைகள் மூலம் ரேடியோ நிலையங்களைத் தேடலாம் மற்றும் அவற்றைக் கேட்கலாம். உங்களுக்குப் பிடித்தமான ரேடியோ நிலையங்களையும் முன்னமைக்கப்பட்ட பட்டியலில் சேமிக்கலாம்.

ரேடியோவை இயக்கவும்

FM/AM ரேடியோ

முகப்பு திரையில் அனைத்து மெனுக்களும் > ரேடியோ- என்பதை அழுத்தவும், அல்லது கட்டுப்பாட்டு குழுவில் உள்ள ரேடியோ பட்டனை அழுத்தவும்.
  • வாகன மாதிரி அல்லது விவரக்குறிப்புகளைப் பொறுத்து, காட்டப்படும் திரைகள் மற்றும் கிடைக்கக்கூடிய செயல்பாடுகள் மாறுபடலாம்.
விருப்பம் A
விருப்பம் B
  1. ரேடியோ மோடைத் தேர்ந்தெடுக்கவும்.
  1. தற்போதைய ஒளிபரப்பு நிலையத்திலிருந்து (கிடைக்கும்பட்சத்தில்) பெறப்பட்ட உரைத் தகவலைக் காண்பிக்க அமைக்கவும்.
  1. விருப்பங்கள் பட்டியலைக் காண்பிக்கவும்.
  1. அணை (பொருத்தி இருந்தால்): திரையை அணைக்கவும். அதை மீண்டும் இயக்க திரையை அழுத்தவும்.
  2. ஸ்டேஷன் பட்டியல்: கிடைக்கக்கூடிய ரேடியோ நிலையங்களின் பட்டியலை அணுகவும்.
  3. FMஐ ஸ்கேன் செய்யவும்/AMஐ ஸ்கேன் செய்யவும் (பொருத்தி இருந்தால்): ஒவ்வொரு ரேடியோ நிலையத்தையும் சில வினாடிகளுக்கு முன்னோட்டமிட்டு, நீங்கள் விரும்பும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. பிடித்தவையை நீக்கவும்: முன்னமைக்கப்பட்ட பட்டியலிலிருந்து சேமிக்கப்பட்ட ரேடியோ நிலையங்களை நீக்கவும். > ரேடியோ நிலையங்களை நீக்குகிறது” என்பதை பார்க்கவும்.
  5. ரேடியோ நாய்ஸ் கன்ட்ரோல் (பொருத்தி இருந்தால்): உள்வரும் சிக்னலின் ஒலி தரத்திற்கு FM ரேடியோ இரைச்சல் குறைப்பு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். > ரேடியோ நாய்ஸ் கன்ட்ரோல் (பொருத்தி இருந்தால்)” என்பதை பார்க்கவும்.
  6. தானாக வகைப்படுத்தப்படும் பிடித்தவை (பொருத்தி இருந்தால்): முன்னமைக்கப்பட்ட பட்டியலை அலைவரிசையில் வரிசைப்படுத்தவும்.
  7. பதிவில் பிடித்தவை (பொருத்தி இருந்தால்): முன்னமைக்கப்பட்ட பட்டியலில் சேமிக்கப்பட்ட ரேடியோ நிலையங்களை மறுசீரமைக்கவும். > முன்னமைக்கப்பட்ட பட்டியலை மறுசீரமைத்தல் (பொருத்தி இருந்தால்)” என்பதை பார்க்கவும்.
  8. பிடித்தமானவைகளின் எண்ணிக்கையை அமைக்கவும் (பொருத்தி இருந்தால்): முன்னமைக்கப்பட்ட பட்டியலில் காண்பிக்க ரேடியோ நிலையங்களின் எண்ணிக்கையை அமைக்கவும். > முன்னமைக்கப்பட்ட பட்டியலில் உள்ள ரேடியோ நிலையங்களின் எண்ணிக்கையை மாற்றுகிறது (பொருத்தி இருந்தால்)” என்பதை பார்க்கவும்.
  9. ஒலி அமைப்புகள்: கணினி ஒலி அமைப்புகளைத் தனிப்பயனாக்குங்கள். > ஒலி அமைப்புகளை கட்டமைத்தல்” என்பதை பார்க்கவும்.
  10. கையேடு: சிஸ்டத்திற்கான ஆன்லைன் பயனர் வழிகாட்டிக்கு அணுகலை வழங்கும் QR குறியீட்டைக் காட்டுகிறது. பாதுகாப்புக் காரணங்களுக்காக, நீங்கள் வாகனம் ஓட்டும்போது அல்லது பார்க்கிங் பிரேக் பயன்படுத்தப்படாதபோது அல்லது முடக்கிய நிலையில் உள்ளபோது உங்களால் QR குறியீட்டை அணுக முடியாது.
  1. முந்தைய நிலைக்குத் திரும்பவும்.
  1. ரேடியோ நிலைய தகவல்
  1. தற்போதைய ரேடியோ நிலையத்தை முன்னமைக்கப்பட்ட பட்டியலில் சேமிக்கவும் அல்லது பட்டியலிலிருந்து நீக்கவும்.
  1. முன்னமைக்கப்பட்ட பட்டியல்
  1. ஒவ்வொரு ரேடியோ நிலையத்தையும் சில வினாடிகளுக்கு முன்னோட்டமிட்டு, நீங்கள் விரும்பும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும். (பொருத்தி இருந்தால்)
  1. அலைவரிசையை மாற்றவும். முந்தைய அல்லது அடுத்த அலைவரிசைக்கு மாற அழுத்தவும் அல்லது அலைவரிசையை விரைவாக மாற்ற அழுத்திப் பிடிக்கவும். (பொருத்தி இருந்தால்)

DRM ரேடியோ (பொருத்தி இருந்தால்)

  1. ரேடியோ மோடைத் தேர்ந்தெடுக்கவும்.
  1. கிடைக்கக்கூடிய ரேடியோ சேவைகளின் பட்டியலை அணுகவும்.
  1. விருப்பங்கள் பட்டியலைக் காண்பிக்கவும்.
  1. அணை (பொருத்தி இருந்தால்): திரையை அணைக்கவும். அதை மீண்டும் இயக்க திரையை அழுத்தவும்.
  2. DRMஐ ஸ்கேன் செய்யவும்: ஒவ்வொரு ரேடியோ நிலையத்தையும் சில வினாடிகளுக்கு முன்னோட்டமிட்டு, நீங்கள் விரும்பும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. பிடித்தவையை நீக்கவும்: முன்னமைக்கப்பட்ட பட்டியலிலிருந்து சேமிக்கப்பட்ட ரேடியோ நிலையங்களை நீக்கவும். > ரேடியோ நிலையங்களை நீக்குகிறது” என்பதை பார்க்கவும்.
  4. வானிலை/ செய்தி அறிக்கை: வானிலை மற்றும் செய்தி அறிவிப்புகளைப் பெறும் வகையில் அமைக்கவும்.
  5. ஒலி அமைப்புகள்: கணினி ஒலி அமைப்புகளைத் தனிப்பயனாக்குங்கள். > ஒலி அமைப்புகளை கட்டமைத்தல்” என்பதை பார்க்கவும்.
  6. கையேடு: சிஸ்டத்திற்கான ஆன்லைன் பயனர் வழிகாட்டிக்கு அணுகலை வழங்கும் QR குறியீட்டைக் காட்டுகிறது. பாதுகாப்புக் காரணங்களுக்காக, நீங்கள் வாகனம் ஓட்டும்போது அல்லது பார்க்கிங் பிரேக் பயன்படுத்தப்படாதபோது அல்லது முடக்கிய நிலையில் உள்ளபோது உங்களால் QR குறியீட்டை அணுக முடியாது.
  1. முந்தைய நிலைக்குத் திரும்பவும்.
  1. தற்போதைய அலைவரிசையில் கிடைக்கும் ரேடியோ சேவைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
  1. தற்போதைய ரேடியோ நிலையத்தை முன்னமைக்கப்பட்ட பட்டியலில் சேமிக்கவும் அல்லது பட்டியலிலிருந்து நீக்கவும்.
  1. முன்னமைக்கப்பட்ட பட்டியல்
  1. ரேடியோ நிலைய தகவல்

ரேடியோ மோடை மாற்றவும்

விருப்பம் A

ரேடியோ திரையில், ரேடியோ மோடுகளுக்கு இடையில் மாற FM/AM அழுத்தவும்.
  • மாற்றாக, கட்டுப்பாடு குழுவில் உள்ள ரேடியோ பட்டனை அழுத்திப் பிடிக்கவும்.

விருப்பம் B

ரேடியோ திரையில், பேண்டு என்பதை அழுத்தி, விருப்பமான மோடைத் தேர்ந்தெடுக்கவும்.
  • மாற்றாக, கட்டுப்பாடு குழுவில் உள்ள ரேடியோ பட்டனை அழுத்திப் பிடிக்கவும்.

கிடைக்கக்கூடிய ரேடியோ லையங்களை ஸ்கேன் செய்கிறது

ஒவ்வொரு ரேடியோ நிலையத்தையும் சில வினாடிகளுக்கு கேட்டு, நீங்கள் விரும்பும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.

விருப்பம் A

  1. ரேடியோ திரையில், உங்கள் வாகன மாதிரியைப் பொறுத்து என்பதை அழுத்தவும் அல்லது மெனு > FMஐ ஸ்கேன் செய்யவும் அல்லது AMஐ ஸ்கேன் செய்யவும் என்பதை அழுத்தவும்.
  1. ஐந்து வினாடிகளுக்கு கிடைக்கக்கூடிய நிலையங்களின் பட்டியலில் ஒவ்வொரு ரேடியோ நிலையத்தின் முன்னோட்டத்தையும் கணினி வழங்குகிறது.
  1. நீங்கள் கேட்க விரும்பும் ரேடியோ நிலையத்தைக் கண்டால், ஸ்கேனை நிறுத்துவதற்கு -ஐ அழுத்தவும்.
  1. தற்போதைய ரேடியோ நிலையத்தை நீங்கள் தொடர்ந்து கேட்கலாம்.

விருப்பம் B

  1. ரேடியோ திரையில், உங்கள் வாகன மாதிரியைப் பொறுத்து என்பதை அழுத்தவும் அல்லது மெனு > DRMஐ ஸ்கேன் செய்யவும், FMஐ ஸ்கேன் செய்யவும் அல்லது AMஐ ஸ்கேன் செய்யவும் என்பதை அழுத்தவும்.
  1. ஐந்து வினாடிகளுக்கு கிடைக்கக்கூடிய நிலையங்களின் பட்டியலில் ஒவ்வொரு ரேடியோ நிலையத்தின் முன்னோட்டத்தையும் கணினி வழங்குகிறது.
  1. நீங்கள் கேட்க விரும்பும் ரேடியோ நிலையத்தைக் கண்டால், ஸ்கேனை நிறுத்துவதற்கு என்பதை அழுத்தவும்.
  1. தற்போதைய ரேடியோ நிலையத்தை நீங்கள் தொடர்ந்து கேட்கலாம்.

ரேடியோ நிலையங்களைத் தேடுகிறது

அலைவரிசையை மாற்றுவதன்மூலம் ரேடியோ நிலையங்களைத் தேடலாம்.
அலைவரிசையை மாற்றுவதற்கு, கட்டுப்பாட்டு குழுவில் பின்னோக்கி தேடல் பட்டன் (SEEK) அல்லது முன்னோக்கி தேடல் பட்டன் (TRACK)-ஐ அழுத்தவும்.
  • கிடைக்கக்கூடிய ரேடியோ நிலையம் தானாகவே தேர்ந்தெடுக்கப்படும்.
அலைவரிசையை கைமுறையாக மாற்ற, வாகன மாடலைப் பொருத்து, கட்டுப்பாட்டு குழுவில் தேடல் நாப் (TUNE FILE) -ஐ திருகவும் அல்லது ரேடியோ திரையில் -ஐ அழுத்தவும்.

ரேடியோ நிலையங்களைச் சேமிக்கிறது

உங்களுக்குப் பிடித்த ரேடியோ நிலையங்களைச் சேமித்து, முன்னமைக்கப்பட்ட பட்டியலில் இருந்து தேர்ந்தெடுத்து அவற்றைக் கேட்கலாம்.
தற்போதைய ரேடியோ நிலையத் தகவலுக்கு அடுத்துள்ள நட்சத்திர ஐகானை அழுத்தவும்.
  • மாற்றாக, முன்னமைக்கப்பட்ட பட்டியலில் (பொருத்தி இருந்தால்) வெற்று ஸ்லாட்டை அழுத்திப் பிடிக்கவும்.
  • மெனு > ஸ்டேஷன் பட்டியல் என்பதை அழுத்தலாம் மற்றும் கிடைக்கக்கூடிய ரேடியோ நிலையங்களின் (பொருத்தி இருந்தால்) பட்டியலிலிருந்து ரேடியோ நிலையங்களைச் சேமிக்கவும்.
குறிப்பு
  • நீங்கள் 40 ரேடியோ நிலையங்கள் வரை சேமிக்க முடியும்.
  • ஏற்கனவே நிரப்பப்பட்ட ஸ்லாட்டைத் தேர்ந்தெடுத்தால், அந்த நிலையம் நீங்கள் கேட்கும் நிலையத்தால் மாற்றப்படும் (பொருத்தி இருந்தால்).

சேமிக்கப்பட்ட ரேடியோ நிலையங்களைக் கேட்கிறது

ரேடியோ திரையில், முன்னமைக்கப்பட்ட பட்டியலில் இருந்து ரேடியோ நிலையங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
  • மாற்றாக, முன்னமைக்கப்பட்ட பட்டியலில் உள்ள ரேடியோ நிலையங்களை உருட்ட ஸ்டீயரிங் வீலில் உள்ள தேடல் லிவர்/பட்டனைப் பயன்படுத்தவும்.

முன்னமைக்கப்பட்ட பட்டியலை மறுசீரமைத்தல் (பொருத்தி இருந்தால்)

  1. ரேடியோ திரையில், மெனு > பதிவில் பிடித்தவை-என்பதை அழுத்தவும்.
  1. நீங்கள் நகர்த்த விரும்பும் ரேடியோ நிலையத்திற்கு அடுத்ததாக -ஐ அழுத்தி, விரும்பிய இடத்திற்கு இழுக்கவும்.
  1. உங்கள் மாற்றங்கள் முன்னமைக்கப்பட்ட பட்டியலில் உடனடியாகப் பயன்படுத்தப்படும்.
  1. முடிப்பதற்கு -ஐ அழுத்தவும்.
குறிப்பு
முன்னமைக்கப்பட்ட பட்டியலை அலைவரிசையில் வரிசைப்படுத்த, மெனு > தானாக வகைப்படுத்தப்படும் பிடித்தவை (பொருத்தி இருந்தால்) அழுத்தவும்.

ரேடியோ நிலையங்களை நீக்குகிறது

  1. ரேடியோ திரையில், மெனு > பிடித்தவையை நீக்கவும்-என்பதை அழுத்தவும்.
  1. நீங்கள் நீக்க விரும்பும் ரேடியோ நிலையங்களை தேர்ந்தெடுத்து மற்றும் நீக்கவும் > ஆம்.என்பதை அழுத்தவும்.
  1. தேர்ந்தெடுக்கப்பட்ட ரேடியோ நிலையம் முன்னமைக்கப்பட்ட பட்டியலில் இருந்து நீக்கப்படும்.
குறிப்பு
நீங்கள் சேமித்த ரேடியோ நிலையங்களில் ஒன்றைக் கேட்கிறீர்கள் என்றால், ரேடியோ நிலையத்தை நீக்க தற்போதைய ரேடியோ நிலையத் தகவலுக்கு அடுத்துள்ள சிவப்பு நட்சத்திர ஐகானை அழுத்தவும்.

முன்னமைக்கப்பட்ட பட்டியலில் உள்ள ரேடியோ நிலையங்களின் எண்ணிக்கையை மாற்றுகிறது (பொருத்தி இருந்தால்)

  1. ரேடியோ திரையில், மெனு > பிடித்தமானவைகளின் எண்ணிக்கையை அமைக்கவும் என்பதை அழுத்தவும்.
  1. ரேடியோ நிலையங்களின் எண்ணிக்கையைத் தேர்ந்தெடுத்து, OK - என்பதை அழுத்தவும்.
  1. தேர்ந்தெடுக்கப்பட்ட ரேடியோ நிலையங்களின் எண்ணிக்கை முன்னமைக்கப்பட்ட பட்டியலில் காட்டப்படும்.
குறிப்பு
நீங்கள் முன்பு அமைக்கப்பட்ட எண்ணை விட குறைவான எண்ணை அமைத்தால், தேர்ந்தெடுக்கப்பட்ட ரேடியோ நிலையங்களின் எண்ணிக்கை மட்டுமே காட்டப்படும், மீதமுள்ளவை நீக்கப்படும்.