முதல் இயக்க அமைவைப் பயன்படுத்துதல்
ஒரு வாகனத்தை பல பேர் பயன்படுத்தினால் ஒவ்வொரு ஓட்டுநருக்கும் சிஸ்டம் அமைப்புகளை நீங்கள் உள்ளமைக்கலாம்.
நீங்கள் பயனர் பெயர், மொழி போன்ற திரையில் காண்பிப்பதற்கான மதிப்புகளை முதல் இயக்க அமைவில் உள்ளமைக்கலாம்.
- பாதுகாப்பு எச்சரிக்கை செய்தி தோன்றும்போது, அதைப் படித்து, ஓட்டுநர் படத்தைத் தேர்ந்தெடுத்து, பின்னர் உறுதி செய்யவும் என்பதை அழுத்தவும்.
- நீங்கள் விருந்தினராக உள்நுழையும்போது,சுயவிவர அமைப்புகளை உங்களால் உள்ளமைக்க முடியாது. வேறொரு சுயவிவரத்தை அமைக்க, மற்றொரு பயனரைத் தேர்ந்தெடுக்கவும்.
- நீங்கள் 2 பயனர்கள் வரை பதிவு செய்யலாம்.
- வாகனத்தின் மாதிரி மற்றும் விவரக்குறிப்புகளைப் பொறுத்து ஸ்க்ரீன் வேறுபடலாம்.
- முதல் இயக்க அமைவுத் திரை தோன்றும்போது, தொடங்கவும். என்பதை அழுத்தவும்.
- சூழலை மாற்றாமல் இயல்புநிலை அமைப்புகளைப் பயன்படுத்த, தவிர் என்பதை அழுத்தவும்.
- திரையில் காண்பிக்கப்படும் மொழியை அமைத்து, பின்னர் அடுத்து என்பதை அழுத்தவும்.
- ஓட்டுநரின் பெயரை அமைக்க, திருத்தவும். என்பதை அழுத்தவும்.
பெயர் மாற்றத்திற்கான திரை தோன்றும்.
- ஓட்டுநரின் பெயரை மாற்றாமல் முதல் இயக்க அமைவைத் தொடர, அடுத்து என்பதை அழுத்தவும்.
- வழித் தேடல் விருப்பத் திரை தோன்றும்போது, வழிசெலுத்த வழித் தேடல் விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, அடுத்து என்பதை அழுத்தவும்.
- நெட்வொர்க் சிக்னல் நிலையைப் பொறுத்து கிடைக்கக்கூடிய அமைப்புகள் வேறுபடலாம்.
- அதிகபட்சம் இரண்டு வழித் தேடல் விருப்பங்களைத் தேர்வு செய்யலாம்.
- வாகனத்தின் மாதிரி மற்றும் விவரக்குறிப்புகளைப் பொறுத்து ஸ்க்ரீன் வேறுபடலாம்.
- முதல் இயக்க அமைவுத் திரை தோன்றும்போது, சரி என்பதை அழுத்தவும்.
முகப்புத் திரையைக் காட்டும்.
- விரிவான பயனர் தகவல் மற்றும் செயல்பாட்டு சூழலை அமைக்க, சுயவிவர அமைப்புகள் என்பதை அழுத்தவும்.